Latest News :

நான்கு கதைகளைக்கொண்டு உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’!
Monday April-22 2024

அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜெபி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’. நான்கு விதமான வாழ்க்கையை மையமாக கொண்டு, நான்கு விதமான கதைகளையோடு உருவாகும் இப்படத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிஹா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, அய்ரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சரவதி,  ஹரிநிரமேஷ்கிருஷ்ணன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

சிங்நேச்சர் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜிஎஸ் சினிமா இண்டர்நேஷ்னல் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தேவ் பிரகாஷ் இசையமைக்க, தமிழ் அரசன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலை இயக்குநர்களாக ராம் , தினேஷ், சுபேந்தர் ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள்.  ஏ.எஸ். தாவூத், அக்ஷரா பாலகிருஷ்ணன் பாடல்கள் எழுத, ராக் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

மும்பை செட் இங்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அதில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை குடிசைமாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு பின்னணியில் ஒரு கதை, திருத்தணி  அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை  என நான்கு விதமான வாழ்க்கை,  நான்கு  கதைகள்  அதை இணைக்கும் ஒரு புள்ளி,  என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜெபி.

 

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில்,  இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன  நிர்வாக இயக்குநர்ஜி.கே.எம்.தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகிய திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

 

Niram Marum Ulagil Firist Look

 

இரத்தம் பாயும் கரும்  சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஹவுஸிங் போர்ட் பின்னணி, ஒரு பெண்ணின் நிழல் முகம், என குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றத்தில் பார்த்தவுடன் இதயத்தை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரின் லுக்கும் இதுவரையிலும் அவர்களை பார்த்திராத வகையிலான தோற்றத்தில் மிரட்டுகிறது. வித்தியாசமான இந்த முதல் பார்வை போஸ்டர் திரைப்பட ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

Related News

9698

Kids special animation film 'kiki & koko' teaser launch event
Saturday December-27 2025

India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...

இந்த படம் எங்களுக்கு பெருமை - ‘கிகி & கொகொ’ படக்குழு உற்சாகம்
Saturday December-27 2025

இனிகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...

வைரலான ஸ்ருதிஹாசன் பாடல்!
Saturday December-27 2025

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...

Recent Gallery