பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்குநராக அறிமுகமாகும் ‘மதுரவீரன்’ படத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டு உருவாகும் இப்படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து பி.ஜி.முத்தையா இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்ய, விதே கலை துறையை கவனிக்கிறார். ஸ்டன்னர் சாம் ஆக்ஷனை வடிவமைக்க, கிருபாகரன் ராமசாமி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படத்தில் பஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ’மதுரவீரன்’ பஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.
நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...