லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்ம், கவுரவ் இயக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக்கொண்டு பாடல்களை வெளியிட்டார். இயக்குநர்கள் அறிவழகன், ஏ.எல்.விஜய், ராஜு மகாலிங்கம், தனஞ்செயன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.
இசை வெளியீட்டுக்கு முன்பாக இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் உருவான பாடல்களுக்கு நடன கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். பிறகு மேடைக்கு வந்த ஹீரோயின் மஞ்சிமா மோகன், ரசிகர்களின் வேண்டுகோளுக்காக மேடையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...