அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், ஜி.பி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.பி.செல்வகுமார் தயாரிப்பில், யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் பி.யுவராஜ் வெளியிடும் படத்திற்கு ‘பேபி & பேபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரக்யா நாக்ரா நடிக்கிறார். யோகி பாபு மிக முக்கியமான வேடத்தில் நடிக்க, ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார்.
குடும்ப பின்னணியில் செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் திருப்புமுனை கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். ’நாளைய தீர்ப்பு’ படத்தில் விஜயின் முதல் கதாநாயகியாகவும், ‘பவித்ரா’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்த கீர்த்தனா செல்வகுமார், சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர்களில் அம்மா வேடங்களில் நடித்து வந்த நிலையில், இப்படம் மூலம் மீண்டும் திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டி.பி.சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.
படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியீட்டு பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம்...
பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்...