Latest News :

’துர்கி’-யாக கன்னட சினிமாவில் கால் பதிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
Wednesday April-24 2024

கதாநாயகிகளை மையப்படுத்திய கதைக்களங்களில் தொடர்ந்து வெற்றிக் கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்ததோடு, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

 

இந்த நிலையில், ‘உத்தராகாண்டா’ என்ற படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். இந்த படத்தில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் டாக்டர்.சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயா ஆகியோர் நடிக்கிறார்கள். இதில், டாலி தனஞ்செயாவுக்கு ஜோடியாக துர்கி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.  இவர்களுடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி.ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரோஹித் பதகி இயக்குகிறார். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார். கலை இயக்குநராக விஸ்வாஸ் காஷ்யப் பணியாற்றுகிறார்.

 

Udhrakanda

 

ஐஸ்வர்யா ராஜேஷின் அறிமுகத்தால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பிஜய்ப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

Related News

9703

நடிகர் சூர்யாவின் 47 வது படம் பூஜையுடன் தொடங்கியது
Monday December-08 2025

ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...

மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை' படத்தின் 2வது போஸ்டர் வெளியானது
Sunday December-07 2025

இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...

’த்ரிஷ்யம் 3’ திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ்
Sunday December-07 2025

மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...

Recent Gallery