Latest News :

காதல் மற்றும் ஊடலை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஹாஃப் பாட்டில்’ பாடல்!
Friday April-26 2024

திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில், தற்போதைய இளைஞர்களின் காதலையும், ஊடலையும் மையமாக வைத்து உருவாகியுள்ள சுயாதீன வீடியோ பாடல் ‘ஹாஃப் பாட்டில்’.

 

சென்னையில் படித்துவிட்டு அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எழில்வாணன்.இ.வி, வரிகள் எழுதி இயக்கி நடித்திருக்கும் இந்த பாடலில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் நடிகை ரவீனா நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் ரேணுகா நடித்திருக்கிறார். தீபன் மற்றும் வைபம் இசையமைத்திருக்கும் இந்த வீடியோ பாடலுக்கு, மான்சி மற்றும் இ.வி இணைந்து நடனம் அமைத்துள்ளனர். இ.எஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மச்சா ஸ்வக் டான்ஸ் (ES Production & Macha Swag Dance) நிறுவனங்கள் தயாரித்திருக்கின்றன.

 

இறுதிக்கட்டப் பணிகளில் உள்ள ‘ஹாஃப் பாட்டில்’ பாடல் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்பாடல் குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

நிகழ்ச்சியில் பாடல் மற்றும் அதில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய எழில்வாணன்.இ.வி, “இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு  பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம். இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்.  நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன். என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள்.எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம்... அவர் எனக்கு ஒரு மேஜிக் (Work) எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி.

 

இரண்டு வருடங்கள் முன்பே இதற்கான நடன அமைப்பை உருவாக்கி விட்டேன், இந்த பாடலுக்கு ரவீனா சரியாக இருப்பார் என்று அவரை அணுகினேன் அவர்  உடனடியாக பண்ணலாம் என ஒத்துக் கொண்டு செய்தார். இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது  மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

Half Bottle Video Song

 

நடிகை ரவீனா பேசுகையில், “எங்களை ஆதரிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஆல்பம் பாடலின் ஷூட்டிங் வெறும் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. அத்தனை திட்டமிடலுடன் நடந்து முடிந்தது. ஷூட் ரொம்ப ஜாலியாக நடந்தது. எப்போதும் உடன் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள்  நம்மை காம்போர்ட்டபிளாக வைத்துக் கொண்டால் நாம் சிறப்பாக வேலை செய்வோம், அந்த வகையில் இந்த படக்குழுவினர் என்னை மிகச்சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர்.  எழில்வாணன் மிகத் திறமைசாலி இந்த பாடலின் முழு வேலைகளையும் அவரே செய்துவிட்டார் இந்த துறையின் மீதான காதலில் அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து, இதைச் செய்து வருகிறார். சினிமாத்துறை மீது காதலுடன் இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் படைப்பில்  நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி.  இந்த டீமில் வேலை என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விரைவில் இணையத்தில் வெளியாகும்..உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார். 

Related News

9707

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
Sunday November-09 2025

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற  சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...

Recent Gallery