தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கிய உதயநிதி, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகந்து வருகிறார். தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்தவர், தற்போது ஆக்ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.
உதயநிதியில் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள ‘இப்படை வெல்லும்’ படதை கவுரவ் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக மஞ்சுமா மோகன் நடிக்க, வில்லன்களாக டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ”டேனியல் பாலாஜியுடன் சண்டை போடும் போது எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ஆர்.கே. சுரேஷ் உடன் சண்டை போட்ட போது அவர் என்னை நிஜமாகவே அடித்துவிட்டார்.
அவர் அடித்ததினால் வலி தாங்காமல், பைட் மாஸ்டரிடம், அவர் நிஜமாகவே அடிக்கிறார், என்று புகார் கூறினேன். அந்த அளவுக்கு காட்சிகளுக்காக ரியலாக அடிவாங்கி நடித்திருக்கிறேன்.” என்றார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...