அறிமுக இயக்குநர் பி.மணிவர்மன் இயக்கத்தில், தமன் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படம் ‘ஒரு நொடி’. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் அழகர் மற்றும் கே.ஜி.ரத்திஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், சினிமா விமர்சகருமான தனஞ்செயன் தனது கிரியேடிவ் எண்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.
இப்படத்திற்காக ஜி.தனஞ்செயன் உள்ளிட்ட படக்குழுவின மேற்கொண்ட விளம்பர யுக்தியினால் படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்ட சிறப்புக் காட்சி மூலம் படம் வெகுவாக பாராட்டப்பட்டது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘ஒரு நொடி’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்கள் மதுரை அழகர், கே.ஜி.ரத்திஷ் மற்றும் ஜி.தனஞ்செயன் ஆகியோர் இணைந்து இயக்குநர் பி.மணிவர்மனுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்கள்.

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...