மலையாள நடிகையை விடாமல் பிடித்துக் கொண்ட ரியோ ராஜ்!
Saturday May-04 2024

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வரும் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘ஜோ’. அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம் இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், படத்தில் அறிமுகமான மலையாள நடிகை மாளவிகா மனோஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ரசிகர்களை மட்டும் அல்ல, நடிகர் ரியோ ராஜின் மனதையும் அவர் கவர்ந்துவிட்டார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

 

’ஜோ’ படம் வெளியாகி சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரியோ ராஜ் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் நாயகியாக ‘ஜோ’ படத்தில் நடித்த மலையாள நடிகை மாளவிகா மனோஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்திற்குள் வந்ததற்கு காரணம் ரியோ ராஜ் என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. காரணம், இந்த புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் கலையரசன் தங்கவேல் பிளாக்‌ஷீப் குழுவை சேர்ந்தவர் என்பதோடு, இந்த படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிருவனத்துடன் இணைந்து பிளாக்‌ஷீப் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆக, பர்ஸ் காப்பி அடிப்படையில் தயாராகும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக மட்டும் அல்ல பல விசயங்களில் தலையிடும் அதிகாரம் பெற்றிருப்பதால், கதாநாயகியை அவர் தான் தேர்வு செய்திருக்க வேண்டும். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்ல இருக்கும் இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். வருண் கே.ஜி படத்தொகுப்பு செய்ய, வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறர். 

 

Rio Raj New Movie Start

 

நேற்று தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை இரண்டே மாதங்களில் முடித்து, இந்த வருடத்தின் பிற்பகுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

9724

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery