Latest News :

நடிகர் கிருஷ்ணாவின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
Saturday May-04 2024

தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கிருஷ்ணா, ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனம் சார்பில் நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும் புதிய படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன்ஸ் நம்பர் 1’ என்ற தலைப்பு வைத்து தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது.

 

இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய துரை சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார்.

 

Krishna New Movie

 

படம் குறித்து தயாரிப்பாளர் நஞ்சுண்டப்பா ரெட்டி கூறுகையில், “ஓசூரில் பிசினஸ் செய்து வரும் நாங்கள் முதல் முறையாக தமிழ் சினிமாவில் ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் என்ற கம்பெனி தொடங்கி தொடர்ந்து படங்கள் தயாரிக்க உள்ளோம். கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார். இவர் ‘நிழல்’ உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். புதுமுக நடிகராக சந்தோஷ் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களோடு மாறன், இமான் அண்ணாச்சி, ஆதித்யா கதிர், சாம்ஸ்,  இயக்குநர் ஏ. வெங்கடேஷ் மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். உங்களுடைய முழு ஆதரவு படத்திற்கு தர வேண்டும்” என்றார்.

Related News

9725

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery