பிரபல டிஜிட்டல் ஊகமான பிகைண்ட் உட்ஸின் நிறுவனரும், முதன்மை செயல் அலுவலருமான மனோஜ்.என்.எஸ் இயக்கி தயாரிக்கும் படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், படத்தின் முன்னோட்ட பணிகளை முடித்த படக்குழு முதல் கட்டப் படப்பிடிப்பை தற்போது தொடங்கியுள்ளது. இதில், பிரபு தேவா, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், பாடல் பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கியிருப்பதோடு, யோகி பாபு நடிக்கும் காட்சிகளை அடுத்தக் கட்டப் படப்பிடிப்பில் படமாக்க உள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபு தேவா இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் புரோமோ வீடியோவை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...