‘ராக்கெட் பாய்ஸ்’ மற்றும் ‘ஃபார்சி’ போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ரெஜினா கசாண்டரா, தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’, நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் ’செக்ஷன் 108’ படங்களில் நடித்து வருவதோடு, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும், சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அழகிய புடவையில் அசத்தலாக தூய்மை பணியில் ஈடுபட்ட ரெஜினா, தற்போது பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக SUP மெரினா கிளப் உடன் கைகோர்த்துள்ளார்.
இது குறித்து கூறிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா, “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். அவர்களின் இந்த சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்த குழுவை வழிநடத்தும் அனிஷ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்.

கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...