13:13 மணிக்கு தொடங்கிய ஜிவி பிரகாஷின் ‘13’ பட டப்பிங் பணிகள்!
Sunday May-05 2024

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் சார்பில் அன்சு பிரபாகர் தயாரிப்பில், கே.விவேக் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் படம் ‘13’. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இதில் ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் தொகுப்பாளினி ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

சி.எம்.மூவேந்த ஒளிப்பதிவு செய்ய,ம் சித்துகுமார் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வனப்பகுதிகளில் 80 நாட்கள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்று (மே 4) சென்னையில் தொடங்கியது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நேற்று 13:13 மணிக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் டப்பிங் பணியை தொடங்கி வைத்தார்.

 

படம் குறித்து இயக்குநர் விவேக் கூறுகையில், “'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.” என்றார்.

 

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், “’13' படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.” என்றார்.

Related News

9734

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery