இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்திற்கு ‘பைசன் - காளமாடன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், நாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். இவர்களுடன் லால், பசுபதி, கலையரசன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள், அருவி மதன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜுடன் தயாரிப்பாளராக கைகோர்த்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 6) பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...