தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், கடந்த 6 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் வெளியாவதற்கு தடை விதித்துள்ளார். இந்த தடையால் கடந்த வாரம் சுமார் 5 க்கும் மேற்பட்ட புதிய படங்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே, விஷாலின் தடை தொடர்வதால், தீபாவளிக்கு வெளியாக இருந்த விஜயின் ‘மெர்சல்’ படத்தின் ரிலிஸும் கேள்விக்குறியாக இருந்தது. அதே சமயம், விஜய் தரப்பினர், யார் எதற்காக தடை விதித்தாலும், எந்த பிரச்சினை செய்தாலும், அறிவித்தது போல 18 ஆம் தேதி மெர்சல் வெளியாகியே தீரும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில், கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இன்று மீண்டும் அரசுடன் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், ”தீபாவளிக்கு இரு படங்கள் மட்டுமே ரிலீஸ். விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. அது தவிர்த்து மேயாத மான், சென்னையில் ஒரு நாள்-2, கொடிவீரன், அறம் உள்ளிட்ட படங்களில் ஒரு படம் மட்டுமே ரிலீசாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...