Latest News :

கவனம் ஈர்க்கும் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படத்தின் முதல் பார்வை!
Wednesday May-08 2024

அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், விமல் மற்றும் கருணாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘போகுமிடம் வெகுதூரமில்லை. ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கிலாரி தயாரித்திருக்கும் இப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், மனதை உருக வைக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் வெளியிட்டார். வெளியான சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் வைரலான முதல் பார்வை போஸ்டர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி  வேன் ஓட்டும் நாயகன் விமல், தனது அவசரப் பணத்தேவைக்காக,  திருநெல்வேலி வரை ஒரு முக்கியமானவரின்  உடலை எடுத்துச் செல்கிறார்.  சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணம் தான், இந்த படத்தின் மையம்.  அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் தடங்கல்களை  தாண்டி அவர் எப்படிச் சென்றடைகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

 

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா.

 

சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணம் படத்தின் மையம் என்பதால், படம் தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. 

 

இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

 

படத்தின் முழு படப்படிப்பும் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

 

Pogum Idam Veguthooram Illai First Look Poster

 

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்ய, சுரேந்தர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ரிச்சி ரிச்சர்ட்சன் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

9742

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery