‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஆண் மகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், கதாநாயகியாக கிருஷ்ண பிரியா அறிமுகமாகிறார். வெற்றிக்கு அப்பாவாக பிரபு நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரசண்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் கே.எம்.சபி மற்றும் பாருக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் கிராமத்து கதைக்களம் கொண்ட நகைச்சுவை குடும்ப திரைப்படமாக உருவாகிறது.
இயக்குநர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மகா கந்தன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக, தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்திருக்கும் நவ்பல் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுத, டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடுகிறார். ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்கிறார்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் மற்ற விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...