Latest News :

ரசிகர்களின் வரவேற்பால் ’ஸ்டார்’ படத்திற்கு திரையரங்கங்கள் அதிகரிப்பு!
Sunday May-12 2024

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. 

 

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இப்படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர்.  8 நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி, சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர். 

 

'தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான ( எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்' என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

 

இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் படத்தை திரையிடும் திரையரங்குகளில் எண்ணிக்கை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 'ஸ்டார்' திரைப்படம் நேற்று முதல் கூடுதலாக 180) திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

 

படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கவினின் நடிப்பையும், யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினர். 

 

இளன் இயக்கத்தில் கவின், லால், பிரீத்தி முகுந்தன் அதிதி பொஹங்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Related News

9748

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery