பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, தற்போது ஓய்வில் இருந்தாலும், அவரது அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், அந்த தகவல்கள் குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் இருந்த ராஜமெளலி, தற்போது தனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.
தனது அடுத்த படத்தை சமூக அக்கறையுடன் கூடிய படமாக இயக்கப் போவதாக தெரிவித்துள்ள ராஜமெளி, அப்படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்க இருப்பதாக கூறினார். ஆனால், இதில் நடிக்க கூடிய ஹீரோ மற்றும் ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் யாரும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லையாம்.
அதேபோல், 2019 ஆம் ஆண்டின் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தெரிவித்த ராஜமெளலி, அப்படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...