Latest News :

புதுமையான கதை சொல்லும் செயலி ‘ரேடியோ ரூம்’ அறிமுகம்!
Tuesday May-14 2024

ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி, இயக்குநர் ஸ்டான்லி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 

சுவாரசியமான, ஆழ்ந்து போக வைக்கக்கூடிய அதீத கதைக் கேட்கும் அனுபவத்தை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ரேடியோ ரூம், வெறும் ஆடியோ புத்தகம் மட்டுமே அல்ல. கதைகளும், நாவல்களும் ஆடியோ நாடகங்களாக மாற்றப்பட்டு பொருத்தமான குரல்கள், இதற்காகவே உருவாக்கிய இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் சேர்க்கப்பட்டு சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும்.

 

ரேடியோ ரூம் செயலியில் பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளும், நடுத்தர கால மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளும் உள்ளன. அறிமுக மற்றும் இளம் எழுத்தாளர்களின் கதைகளும் அரங்கேற இங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

ரேடியோ ரூமில் தற்சமயம் தமிழ் கதைகளும் ஈழத் தமிழ் கதைகளும் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட கதைகளும் தயாரிப்பில் உள்ளன.

 

விரைவில் இந்திய மொழிகளில் மராத்தி மற்றும் வங்காள கதைகளும், பன்னாட்டு மொழிகளில் ஸ்பேனிஷ், போர்த்துகீசிய மற்றும் ஜெர்மானிய கதைகளும் அறிமுகப்படுத்தப் படவுள்ளன. ரேடியோ ரூமில் பலவகையான கதைகள் - செந்தரம், குற்றம், காதல் மற்றும் குழந்தைகளுக்கான கதைகள் உள்ளன. புனை கதை அல்லாத பிரிவுகளில் உடல் நலம், ஆரோக்கியம், பயணம் மற்றும் ஆன்மீகம் உள்ளிட்ட தலைப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

 

வெங்கியின் இடைவிடாத மற்றும் அயராத முயற்சியாலும் விஜய் ரெட்டி , மௌனிகா ரெட்டி ஆகியோரின் உறுதுணையாலும் இன்று உருவாகி நிற்கிறது ரேடியொ ரூம். தளம் உருவாக்குவதிலும் புதுமைகளை செயல்படுத்துவதில் புகழ்பெற்ற லைட்டஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ரேடியோ ரூம் கைகோர்த்துள்ளது.

 

அர்த்தமுள்ள கதைகளையும் கருத்துகளையும் உருவாக்கும் உத்தரவாதத்துடன் கதைகளின் உலகை மேலும் அழகாக்க போகும் இந்த இரு குழுமங்களும் வெகு விரைவில் வீடியோ OTT மற்றும் ஆன்லைன் தொலைக் காட்சியையும் அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள்.

Related News

9753

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
Sunday November-09 2025

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற  சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...

Recent Gallery