Latest News :

’சிவம் பஜே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
Tuesday May-14 2024

கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிப்பில், அப்சர் இயக்கத்தில் அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘சிவம் பஜே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புக்கான அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது நாயகன் அஸ்வின் பாபு இடம்பெற்றுள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

முதல் பார்வை போஸ்டரில், அஸ்வின் ஒற்றைக் காலில் நின்று கோபத்துடன் ஒரு கையால் ஒரு குண்டர்களைத் தூக்குவது போல் இருக்க, பின்னணியில் அகோரிகள், திரிசூலங்கள், இருட்டில் காகங்கள் மற்றும் கடவுள் சிலை ஆகியவை இருக்கின்றது. இவை எல்லாம், படம் தீவிர ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

 

படம் குறித்து தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி கூறுகையில், “அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய கதையை எங்களின் கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சிவம் பஜே தயாரிக்கப்பட்டிருக்கிறார். அப்சர் இயக்கத்தில் உருவாகி வரும் புதுயுகப் படம் இது. இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை விட இந்த ஃபர்ஸ்ட் லுக் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர்களான அர்பாஸ் கான், சாய் தீனா, முரளி சர்மா, பிரம்மாஜி மற்றும் துளசி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாதாஷாபே பால்கே ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2024ல் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வென்ற தசரதி ஷிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தப் படத்தை டெக்னிக்கல் ரீதியாக எந்த வித சமரசமும் செய்யாமல் புதுமையான முறையில் உருவாக்கி வருகிறோம். ஜூன் மாதம் படம் வெளியாகிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிப்போம்.” என்றார்.

 

இயக்குநர் அப்சர் கூறுகையில், ”'சிவம் பஜே' என்ற தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி ஆகியோரின் அமோக ஆதரவால் நான் எதிர்பார்த்ததை விட சிறந்த அவுட்புட் கிடைத்துள்ளது. டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் தருவோம்.” என்றார்.

 

திகங்கனா நாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ஹைப்பர் ஆதி, சாய் தீனா, முரளி சர்மா, பிரம்மாஜி மற்றும் துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Related News

9754

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery