Latest News :

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியீடு!
Saturday May-18 2024

திரைப்படத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் சித்தார்த், தற்போது தனது 40 வது படம் பற்றி அறிவித்துள்ளார். ‘மாவீரன்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தை ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்குகிறார்.

 

இப்படம் குறித்து நடிகர் சித்தார்த் கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள சினிமா பார்வையாளர்களின் இதயங்களைக் கவரும் வகையில் படங்களைக் கொடுக்கும் நம் திரைத்துறையின் இளம் நம்பிக்கையாளர்களுடன் சிறந்த படத்தில் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி. சினிமா ஆர்வலர்களும், குடும்பத்தினரும் 'சித்தா' படத்தின் மீது நிறைய அன்பு கொடுத்தனர். பார்வையாளர்களின் உணர்வுகளுடன் ஈர்க்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பை இந்தப் படம் கொடுத்தது. ’சித்தா’ படத்திற்குப் பிறகு பல கதைகளைக் கேட்டேன். ஆனால், ஸ்ரீகணேஷ் சொன்ன கதை உடனே பிடித்து விட்டது. ஒரு தயாரிப்பாளரின் மகிழ்ச்சி எப்போதும் பார்வையாளர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை உருவாக்குவதாகும். சுவாரஸ்யமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற அருண் விஸ்வாவின் தொலைநோக்கு பார்வை என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அவரை முதன்முறையாக சந்தித்தபோது அவர் ஒரு முதலீட்டாளர்-தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி நல்ல சினிமா மூலம் திரைத்துறையை உயர்த்த கனவு காணும் ஒரு தயாரிப்பாளர் என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. எங்கள் அர்ப்பணிப்பும் ஆர்வமும் பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறுகையில், ”நான் திரைக்கதையை எழுதத் தொடங்கியபோதே, இளமையாகவும் அதேசமயம் அனைத்துப் பரிமாணங்களிலும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நடிகரை எதிர்பார்த்தேன். அதற்கு சித்தார்த்தான் பொருத்தமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. கதையை முழு ஈடுபாட்டோடு கேட்டவர், அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். ஒரு இயக்குநருக்கு அவரைப் போலவே சினிமாவில் ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர் கிடைப்பதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது? எனக்கு அருண் விஸ்வா அப்படியான தயாரிப்பாளர்தான். படத்தில் நடிப்பதற்காக திரைத்துறையில் உள்ள மற்ற பெரிய நடிகர்களுடனும் பேசி வருகிறோம். அதில் நமக்குப் பிடித்தமான திரைத்துறை நட்சத்திர ஜோடிகளும் இருக்கிறார்கள்” என்றார்.

 

தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறுகையில், ”சாந்தி டாக்கீஸ் நிறுவனத்திற்கு என் அம்மாவின் பெயர் தான் சூட்டியிருக்கிறோம். கதைகள் தேர்ந்தெடுக்கும் போது, என் அம்மா தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்தால் எந்த மாதிரியான கதைகளை பார்த்து மகிழ்வாரோ அப்படியான நல்ல கதைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வணிக படங்களை உருவாக்குவதே சாந்தி டாக்கீஸின் முழுமையான நோக்கம். ஸ்ரீகணேஷ் படத்தின் கதையை சொன்ன போது இது மொழி, வயது போன்ற தடைகளை தாண்டி அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் என்பது உறுதியாகத் தெரிந்தது. சித்தார்த் சாரின் நடிப்பு ஆர்வம் நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது. படத்தில் இருந்து அடுத்தடுத்து ஆச்சரியமான பல அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்றார்.

 

வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

9768

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
Sunday November-09 2025

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற  சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...

Recent Gallery