Latest News :

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ படம் பூஜையுடன் தொடங்கியது!
Saturday May-18 2024

இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘கொடி’, ‘வட சென்னை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்திருக்கும் நிலையில், தற்போது பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘மாஸ்க்’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் கவின் நாயகனாக  நடிக்க, நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இவர்களுடன் ருஹானி ஷர்மா,பால சரவணன், அர்ச்சனா சந்தோக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இப்படத்தை இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளார்.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்ய, ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பூர்த்தி மற்றும் விபின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, 

நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி.சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

Related News

9770

விஜய் சேதுபதி தேடும் ‘லட்சுமி’ யார்? - இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் விளக்கம்
Sunday June-02 2024

விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘மஹாராஜா’...

ஹன்சிகாவுக்காக 18 காட்சிகளில் மாற்றம் செய்தோம்! - ’காந்தாரி’ பற்றி கூறிய தனஞ்செயன்
Sunday June-02 2024

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர், விமர்சகர் என பன்முகம் கொண்டவராக சினிமாவில் பயணிக்கும் தனஞ்செயன், தற்போது திரைகக்தையாசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார்...

இப்படி ஒரு வேடத்தில் நடிக்கவில்லை என்றால் நான் நடிகையாக இருக்க தகுதி இல்லாதவள் - நடிகை வாணி போஜன் உருக்கம்
Saturday June-01 2024

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை வைத்து மிகப்பெரிய திரைப்படங்களை தயாரிப்பதோடு, வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் அறிமுக நடிகர்களை வைத்தும் பல தரமான திரைப்படங்களை தயாரித்து மற்றும் வெளியீட்டு வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதல் முறையாக ‘அஞ்சாமை’ என்ற படத்தை முழுமையாக வாங்கி வெளியிடுகிறது...