Latest News :

கேன்ஸ் ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் விஷ்ணு மஞ்சு!
Monday May-20 2024

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’ஹாரிசன் : அன் அமெரிக்கன் சாகா’ (Horizon: An American Saga) திரைப்படத்தின் பிரீமியர் காட்சி கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய திரையுலகின் மதிப்பிற்குரிய நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.

 

டாக்டர் எம்.மோகன் பாபு, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியத் திரைப்படமாக உருவாகும் ‘கண்ணப்பா’-வின் நாயகன் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது மனைவி விரானிகா மற்றும் ‘கண்ணப்பா’ படத்தின் நடன இயக்குநர் பிரபு தேவா ஆகியோரின் வருகை, பிரமாண்ட நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்தது.

 

அட்லியர் விரானிகா வடிவமைத்த தனிச்சிறப்பம்சம் கொண்ட கருப்பு நிற டக்‌ஷிடோ உடையணிந்து கண்கவர் தோற்றத்தில் தோன்றிய நடிகர் விஷ்ணு  மஞ்சு  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும், அவருக்கான அதிநவீன தோற்றத்தை பாலிவுட் ஒப்பனையாளர் அனிஷா ஜெயின் சிறப்பாக வடிவமைத்திருந்தார்.

 

Kannappa Team in Cennes Film Festival

 

கெவின் காஸ்ட்னர் இயக்கிய ‘ஹாரிசன்: அன் அமெரிக்கன் சாகா’ திரைப்படம் அழுத்தமான கதை மற்றும் நட்சத்திர நடிகர்களால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் உள்ள திறமை மற்றும் படைப்பாற்றலை ஒன்றிணைக்கும் சினிமா சிறப்பின் கொண்டாட்டமாக இப்படத்தின் பிரீமியர் காட்சி அமைந்தது.

 

நடிகர் விஷ்ணு மஞ்சு, தனது ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுக்காக தற்போது கேன்ஸில் முகாமிட்டுள்ளார்.  கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை ஒலிம்பியா தியேட்டரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

9771

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery