பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், லைகா புரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் பிரமாண்ட திரைப்படமாக உருவாகியுள்ள ‘இந்தியன் 2’-வின் விளம்பர பணிகளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.
அதன்படி, சமீபத்தில் நடந்து முடிந்த சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி இடையிலான ஐபில் கிரிக்கெட் போட்டியில் ‘இந்தியன் 2’ படத்தின் ஆரம்பக்கட்ட விளம்பர பணிகள் தொடங்கியது. இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துக்கொண்டு படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது எனவும், படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது என்பதையும் உறுதி செய்தனர்.
இந்த தகவல்களோடு, படம் பற்றிய மேலும் பல தகவல்களை படக்குழுவினர் அடுத்தடுத்த நிகழ்விகளில் வெளியிட உள்ளனர்.
டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்...
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...