பி.ராஜசேகரன் தயாரிப்பில், முருகானந்தம் இணை தயாரிப்பில், கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘திரைவி’. இதில், முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சசன் சரவணன், வினோத் சாகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.டி.ஆர் இசையமைத்திருக்கிறார். அருண்பாரதி, வெ.மதன்குமார் பாடல்கள் எழுத, ஆர்.வசந்தகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். எஸ்.எல்.பாலாஜி நடனக் காட்சிகளை வடிவமைக்க, தயாரிப்பு மேற்பார்வையாளராக எஸ்.எம்.ராஜ்குமார் பணியாற்றியிருக்கிறார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.
உலகில் நல்லவர்களும் யாரும் கிடையாது, கெட்டவர்களும் யாரும் கிடையாது, சூழ்நிலை தான் அவரவரை அடையாளப்படுத்துகிறது, எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதனை பிரபல இயக்குநர் சசி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...