Latest News :

’மிராய்’ மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கும் மனோஜ் மஞ்சு!
Tuesday May-21 2024

தெலுங்கு திரையுலக நட்சத்திரம் மற்றும் பிரபல நடிகரின் வாரிசான மனோஜ் மஞ்சு, 8 வருட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். ‘மிராய்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ‘தி பிளாக் வாள்’ வீரன் என்ற கதாபாத்திரத்தில் புதிய ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கும் மனோஜ் மஞ்சு, தனக்கான சூப்பர் ஹீரோ உலகத்தில் பயணிக்க இருக்கிறார். 

 

பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் மிகப்பெரிய பொருட்ச்செலவில் மிக பிரமாண்டமாக் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நடிகர் மனோஜ் மஞ்சுவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.  இதில், 

மனோஜ் மஞ்சு இதுவரை திரையில் கண்டிராத தீவிரமான மற்றும் சக்திவாய்ந்த அவதாரத்தில், ஒரு விசித்திரமான ஆயுதத்துடன், வெட்டவெளி நிலப்பரப்பின் பின்னணியில் தோற்றமளிக்கிறார். ஸ்டைலுடன் வித்தியாசமான கலவையில் தோற்றமளிக்கும் அவரது கதாபாத்திர லுக்,  பார்க்கும் போதே நம்மை மயக்குகிறது. கருப்பு வாள் வீரனாக மின்னுகிறார் மனோஜ். போனிடெயில் மற்றும் ஸ்டைலான தாடியுடன் நீண்ட கூந்தலைக் கொண்ட மனோஜ், அறிமுகக் காட்சியில் லாங் கோட் அணிந்து மிக நாகரீகமாகத் தோன்றுகிறார், அதைத் தொடர்ந்து டி-ஷர்ட்டுடன் பிளேசரில் மற்றொரு அதிரடி-சீக்வென்ஸில் தொடர்ந்து காட்சியளிக்கிறார் இது அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

 

ஒரு நடிகராக அவருடைய பன்முகத் திறமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்தப் பாத்திரம், படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்குமென  எதிர்பார்க்கப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

 

இந்த முதல் பார்வை போஸ்டர் பற்றி நடிகர் மனோஜ் மஞ்சு கூறுகையில், “இத்தகைய சக்தி வாய்ந்த மற்றும் புதிரான கதாபாத்திரத்துடன் மீண்டும் இண்டஸ்ட்ரிக்கு வருவது சவாலாகவும், உற்சாகமாகவும் இருந்தது. "கருப்பு வாள் வீரன் என்பது வலிமை மற்றும் நெகிழ்ச்சியுடன் கூடிய  ஒரு  அழுத்தமான பாத்திரம். நான் மீண்டும் திரைக்கு திரும்பி வருவதற்கு பொறுமையாக காத்திருந்த எனது ரசிகர்களுடன் இந்த பயணத்தை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

 

பிரமிக்க வைக்கும்  கதைகள் நிறைந்த உலகின் பின்னணியில் அமைக்கப்பட்ட இப்படம், பாரம்பரிய வீரம் மற்றும் நவீன கதை சொல்லல் ஆகியவற்றின் கலவையாக உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும்.  இது அசோகரின் 9 அறியப்படாத புத்தகங்களின் ரகசியங்களை ஆராய்கிறது, வரலாறு மற்றும் புராணங்களின் அடிப்படையில்  ஒரு காவியக் கதையாக அசத்தவுள்ளது.

 

முன்னதாக, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு பெரும்  வரவேற்பைக் குவித்தது, இப்போது ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சுவின் பிறந்தநாளில் அவரது கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்   வெளியிடப்பட்டு  வரவேற்பைக் குவித்து வருகிறது. மனோஜ் தெலுங்கு சினிமாவுக்கு மட்டும் மீண்டும் திரும்பவில்லை, அதைத்தாண்டி மீண்டும் ஒரு பெரும் நடிகனாக திரைத்துறைக்கு சவால் விடும் பாத்திரத்தில் அசத்தவுள்ளார்.

 

தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக ரித்திகா நாயக் நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் கட்டமனேனி திரைக்கதையை எழுதியுள்ளார், அவருடன் இணைந்து மணிபாபு கரணம் வசனம்  எழுதியுள்ளார். கௌரா ஹரி இசையமைத்துள்ளார். இப்படத்தின் கலை இயக்குநராக ஸ்ரீ நாகேந்திரா தங்காவும், இணை தயாரிப்பாளராக விவேக் குச்சிபோட்லாவும் பணியாற்றுகிறார்கள். கிருத்தி பிரசாத் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

 

மிராய் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் அடுத்த கோடையில் ஏப்ரல் 18 ஆம் தேதி 2டி மற்றும் 3டி பதிப்புகளில் வெளியிடப்படும்.

Related News

9779

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery