விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் புதிய தகவலை வெளியிட்ட படக்குழு!
Tuesday May-21 2024

‘ரோமியோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. பிரபல ஒளிப்பதிவாளரும், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலி சோடா’, ‘10 எண்றதுக்குள்ள’ போன்ற படங்களை இயக்கியவருமான விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ டாலி தனஞ்செயா, மேகா ஆகாஷ், முரளி சர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், ஏ.எல்.அழகப்பன், திருமலை பட இயக்குநர் ரமணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் சிறப்பு வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

 

சக மனிதர்கள் மீதான தனது அக்கறை மற்றும் கருணையுள்ள ஒருவன் எப்படி ஒரு புதிய தீவில் நுழைந்து, யாரோ ஒருவரின் எதிர்காலமாக மாறுகிறார், என்பது தான் இப்படத்தின் கதை. அந்தமான் தீவுகள், டையூடாமன் தீவுகள் மற்றும் பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் காட்சி மொழியில் மிக பிரமாண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

'கோடியில் ஒருவன்’, 'கொலை', 'ரத்தம்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். 

 

கருப்பொருள், உருவாக்கம் மற்றும் நடிகர்களின் திறமையாம நடிப்பிற்காக பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் இந்தத் திரைப்படம் ஈர்க்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் 'கவிதைத் தனத்துடன் ஆக்‌ஷன் என்டர்டெய்னர்' என்ற புதிய வகையை (Genre) முன்வைக்கிறது. ஏனெனில், இது 

 

வழக்கமான ஆக்‌ஷன் மசாலா படமாக இல்லாமல், கவிதைத் தனத்துடன் கூடிய ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் என்ற புதிய ஜானரில் உருவாகியுள்ள இப்படம், தாழ்த்தப்பட்டவர்களை சமூகம் எப்படி நடத்துகிறது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஹீரோவின் பாத்திரத்தைப் பற்றிய பின்னணியில் வலுவான உணர்ச்சிகளைக் கொண்ட கவிதையாகவும் உருவாகியுள்ளது.

 

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் மே 29 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாக உள்ளது. டீசர் வெளியீட்டின் மூலம் படத்தின் விளம்பர பணிகளை தொடங்கியுள்ள படக்குழு, டீசர் வெளியான பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது.

 

தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கு சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள விஜய் ஆண்டனியின் படங்கள் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இப்படத்தையும் ‘டூஃபான்’ என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9780

பாடகி Dhee-யின் ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு!
Wednesday April-22 2026

இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்...

’29’ பட தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்!
Wednesday April-22 2026

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் ( White Carpet Films) திகழ்கிறது...

பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு!
Wednesday April-22 2026

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் ’ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது...

Recent Gallery