‘போதை ஏறி புத்தி மாறி’ மற்றும் ‘டபுள் டக்கர்’ போன்ற படங்களில் தனது மிரட்டலான நடிப்பு மூலம் பிரபலமடைந்த தீரஜ், நடிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படம் ‘பிள்ளையார் சுழி’. மனோகரன் பெரியதம்பி இயக்கும் இப்படத்தை சிலம்பரசி.வி தயாரிக்க, எயர் ஃப்ளிக்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பை செய்துள்ளது.
உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சிகரமான திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் ரேவதி, மைம் கோபி, மேத்தியூ வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி போன்ற முக்கிய துணை நடிகர்கள் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் உண்ணி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,
திரைப்படக் கல்லூரி மாணவர் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஹாரி.எஸ்.ஆர் இசையமைக்கிறார். ரேஷ்மன் குமார், மோகன்ராஜா மற்றும் கோதை தேவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். படத்தின் திருத்தத்தை தயாரிப்பாளர் சிலம்பரசி வி. கவனித்துள்ளார். சத்திய பிரகாஷ், ராகுல் நம்பியார், மற்றும் சூப்பர் சிங்கர் கௌசிக் ஸ்ரீதரன் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு இந்த ஆண்டு படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் ’பிள்ளையார் சுழி’ திரைப்படம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...