தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்களின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘வா வாத்தியார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் பார்வை போஸ்டரில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக கார்த்தி காக்கி உடையும், கலர் கலரான கண்ணாடியையும் அணிந்து தோன்றுவதும், பின்னணியில் தமிழ் திரையுலகத்தின் சாதனை செய்து, இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாம்பவான் எம்ஜிஆரின் வேடமணிந்து கலைஞர்கள் நிற்பதும், படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இதில், கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஜார்ஜ்.சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். டி.ஆர்.கே.கிரண் கலை இயக்குநராக பணியாற்ற, வெற்றி படத்தொகுப்பு செய்கிறார். அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...