தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் சுமார் 15 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. ‘சித்தி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவர், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களில் நடிப்பதிலே ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு காரணம், வில்லியாக நடித்தால் தான் தனது திறமையை முழுமையாக வெளிக்காட்ட முடியும், என்று அவரே கூறியுள்ளார்.
சீரியல் மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் சிறு வேடத்தில் நடித்திருக்கும் ஷில்பா, நடனத்திலும் அசத்துவார்.
சரி அது போகட்டும், விஷயத்திற்கு வருவோம். ஷில்பாவுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடன் சீரியலில் நடிக்க தொடங்கிய பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக ஷில்பா மட்டும் இனும் சிங்கிளாகவே இருக்கிறார்.
ஏன் அப்படி? என்று அவரிடம் கேட்டதற்கு, “எனது அப்பா போன்ற ஒரு நல்லவரை நான் இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்க போவதில்லை. அதனால் நான் திருமணமும் செய்துகொள்ள போவதில்லை.
திருமணம் செய்துக்கொண்டு பிறகு விவாகரத்து வாங்கி அப்பாவுடன் வாழ்வதை காட்டிலும், திருமணம் செய்யாமலேயே அப்பாவுடன் வீட்டில் வாழ்வதே சந்தோஷமாக இருக்கிறது. அதனால், எனது வாழ்க்கையில் நோ திருமணம். என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.” என்று கூறுகிறார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...