கிருத்திகா உதயநிதி நடிப்பில், ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டிஜே பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இறுதி நாள் படப்பிடிப்பன்று படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார். எம்.செண்பகமூர்த்தி மற்றும் ஆர்.அர்ஜுன் துரை இணை தயாரிப்பை கவனிக்கின்றனர்.

விரைவில் இப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...