‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சரவணன். அப்படத்தை தொடர்ந்து உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ‘ராட்சசன்’ சரவணன் ’குற்றப்பின்னணி’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ள இப்படத்தை ஆயிஷா அகமல் தயாரித்துள்ளார். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜித் இசையமைத்துள்ளார். என்.பி.இஸ்மாயில் பாடல்கள் எழுதியுள்ளார். நாகராஜ்.டிபடத்தொகுப்பு செய்துள்ளார். ஆக்ஷன் நூர் சண்டைக்காட்சிகளை வடிவகைக்க, ரா.ராமமூர்த்தி வசனம் எழுதியுள்ளார்.
தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும் பார்த்தும் திகைக்கக் கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை களத்தில், பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே இந்த ‘குற்றப்பின்னணி’ படம்.
‘ராட்சசன்’ சரவணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வரும் மே 31 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘குற்றப்பின்னணி’ படத்தினை அண்ணாமலையார் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அருணை டி.ராஜாராம் சுமதி வெளியிடுகிறார்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...