பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் மீது ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் பிரபல இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கச்செய்துள்ளது.
முதல் முறையாக பிரியதர்ஷன் இயக்கத்தில் உயதநிதி நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மலையால சினிமாவின் முன்னணி நடிகையான நமிதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் இயக்குநர் மகேந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். விஜயின் ‘தெறி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரனுக்கு நடிக்க பல வாய்ப்புகள் வந்தும், அனைத்தையும் நிராகரித்தவர், இந்த படத்தில் பிரியதர்ஷன் அமைத்த கதாபாத்திரம் குறித்து கேட்டவுடன் ஓகே சொல்லியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிப்பதோடு, படத்தின் வசனத்தையும் எழுவதால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தில் இயக்குநர் மகேந்திரனும் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
தர்பூக நிவா இசையமைக்கும் இப்படத்திற்ஊ ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். மூன்லைட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென் காசி அருகே நடந்து வருகிறது.
நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...