பல திடீர் ஸ்டார்களை பார்த்த தமிழ் சினிமா தற்போது பப்ளிக் ஸ்டார் என்ற துரை சுதாகாரையும் சமீபகாலமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மற்ற ஸ்டார்கள் தமிழ் சினிமாவை பார்த்தது போல அல்லாமல், ரொம்ப எதார்த்தமகாவே சினிமாவை பார்க்கும் பப்ளிக் ஸ்டார், ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதிக்க புது ரூட்டில் பயணிக்க தொடங்கியுள்ளார்.
‘விவேகம்’ படம் வெளியாகும் போது, அதனுடன் வெளியான ‘தப்பாட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் ரியல் எஸ்டேட் தொழிலில் சீரும் சிறப்புமாக இருந்தாலும், சினிமா துறையினர் பலருக்கு அவர் செய்த உதவியால், அவரும் ஒரு ஹீரோவாக்கப்பட்டுள்ளார். ’தப்பாட்டம்’ படத்தோடு இன்னும் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளவர், எனக்காக யாரும் படம் பார்க்க தியேட்டருக்கு வரப்போவதில்லை, நல்ல படமாக இருந்தால் தான் தியேட்டருக்கு வரப்போகிறார்கள். அதே சமயம் நல்ல படமாக இருந்தாலும், அதில் தெரிந்த முகங்கள் யாராவது இருந்தால் தான் தியேட்டருக்கே வருகிறார்கள். அதனால், நானே ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்காமல், முன்னணி ஹீரோக்களின் படங்களில் எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாகிவிட்டேன், என்று சினிமாவின் எதார்த்தை தெரிந்து வைத்திருக்கிறார்.
நடிப்பை பற்றி தெரியாமல் தான் சினிமாவுக்குள் வந்தேன், ஆனால் தற்போது நான் நடித்த படங்களின் மூலம் நடிப்பை கற்றுக்கொண்ட நான், இந்த தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அங்கீகாரம் பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். வில்லன், குணச்சித்திரம் உள்ளிட்ட எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிக்க ரெடி. ஆனால், அது ஒரு பெரிய இயக்குநரின் படமோ அல்லது பெரிய நடிகரின் படமாகவோ இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம் அப்போது தான் என்னை மக்களுக்கு தெரியும்.
பல படங்களுக்கு பொருளாதார ரீதியாக நான் உதவி செய்திருக்கிறேன். நானும் பலரிடம் கதை கேட்டு வருகிறேன். நல்ல கதையாக இருப்பதோடு, அக்கதைக்கு ஏற்ற, மக்களிடம் பிரபலமான நடிகர்களின் கால்ஷீட்டோடு வந்தால் படம் தயாரிக்கவோ அல்லது அவர்களுக்கான என்னால் முடிந்த உதவியை செய்யவோ, நான் ரெடி, என்று தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
நல்ல கதை, நல்ல ஆர்டிஸ்ட் கால்ஷீட் என்று அனைத்தும் இருந்து தயாரிப்பாளர் இல்லாமல் தவிக்கும் இயக்குநர்களே பப்ளிக் ஸ்டாரை சந்தித்தால், மறுநாளே படப்பிடிப்புக்கு போகலாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...