ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் தயாரிப்பில், மாணிக் வித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பித்தல மாத்தி’. இதில், நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ளார். பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தற்போதைய காலக்கட்ட காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் காமெடி உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும், என்று கூறிய இயக்குநர் மாணிக் வித்யா, தனக்கு இப்படம் ஒரு மைல் கல்லாய அமையும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 11 ஆம் தேதி நாயகன் உமாபதி ராமையாவுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 14 ஆம் தேதி ‘பித்தல மாத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து நாயகன் தம்பி ராமையாவுக்கு திருமண வாழ்த்துடன், அவரது படம் வெற்றி பெறவும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...