விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. சுமார் 3500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள மெர்சல் பல சாதனைகளுடனும், பல சோதனைகளுடம் வெளியாக உள்ளதால் படத்தின் மீது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல உலக தமிழர்கள் அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம், ‘மெர்சல்’ படதை பார்க்க விஜய் ரசிகர்களை காட்டிலும் அஜித் ரசிகர்கள் தான் ரொம்ப ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இயக்குநர் அட்லி.
சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு காட்டமான சவால் விட்ட அட்லி, ‘மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறேன், அந்த ஒரு காட்சி போதும் நீங்கள் மிரள. வேறு எந்த படத்திலும், எந்த ஹீரோவையும் காட்டாத வகையில் பெரிய மாஸ் காட்சியாம் அது.
அட்லியின் இத்தகைய சவாலால், அந்த காட்சியை கட்டாயம் பார்த்தாக வேண்டும் என்ற ஆவலோடு அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தனது படம் குரித்து ரொம்ப பேசாதா இயக்குநர்களில் அட்லியும் ஒருவர். ஆனால், அவரே தற்போது தனது படத்தின் காட்சி ஒன்று குறித்து பேசியிருக்கிறார் என்றால், நெருப்பு இல்லாமல் புகையாது என்பதை புரிய வைத்திருக்கிறது. அதேபோல், சமீபத்தில் விஜய் ரசிகர்களிடமும் அக்காட்சி குறித்து பேசிய அட்லி, படத்தில் ஏதோ ஒரு மாயாஜாலத்தை செய்திருக்கிறார் என்பத் தெரிகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...