‘விருது’ படத்தை இயக்கிய ஆ.ஆதவன், தற்போது ‘உலகநாதன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ‘விருது’ படத்தில் நாயகனாக நடித்த அட்சயன் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இதன் மூலம் இயக்குநர் ஆ.ஆதவனும், நாயகன் அட்சயனும் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளனர்.
ஆதி போடோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதிநாடார் தயாரிக்கும் இப்படம் கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த அம்மா - மகன் செண்டிமெண்ட் கதையம்சம்சத்தில் உருவாகிறது.
இந்த படத்தில் நாயகன் அட்சயனுக்கு ஜோடியாக தர்ஷினி மற்றும் கிரேட்டா நடித்திருக்கிறார்கள். நாயகனின் அம்மாவாக விஜய் டிவி புகழ் சசிகலா நடித்திருக்கிறார். நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். வில்லன்களாக கடற்கரை, நாகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை சார்லஸ், ஆதிநாடார் ராமநாதன், ஆதவன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆ.ஆதவன், சண்டைப் பயிற்சி மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றையும் கவனிக்கிறார்.
அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகியுள்ள இதில், கதாநாயகன் முறையாக சிலம்பம் கற்றவர் என்பதால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.டி.ஆதிநாடார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. தற்போது பின்னணி பணிகளில் ஈடுபட்டிருக்கும் படக்குழு விரைவில் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...