மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக பேசும் படங்கள் என்றுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வரிசையில், நடுத்தரக் குடும்பங்களில் யதார்த்த அனுபவங்களை திரையில் காட்ட வருகிறது ‘தோனிமா’ திரைப்படம். சாய் வெங்கடேஸ்வரன் தயாரிக்கும் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார் ஜெகதீசன் சுப்பு.
இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவர். இதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த தம்பதியின் மகன் கடுமையான உடல்நலப் பிரச்சினையை எதிர்கொள்வதால், குடும்பம் கடினமான தடைகளை எதிர்கொள்கிறது. இந்த சவால்களை கடப்பதற்கான அவர்களின் பயணம் தான் கதையின் மையம். இது நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து, பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைக்கும்.
காளி வெங்கட் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இபப்டத்திற்கு இஜே ஜான்சன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முழு வெளியீட்டு உரிமையையும் எஸ்பிஆர் ஸ்டுடியோஸ் எஸ்பி ராஜா சேதுபதி கைப்பற்றியுள்ளார்.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...