கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 'காலம் உள்ளவரை கலைஞர்' கண்காட்சியை இளையதிலகம் பிரபு பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரின் வாழ்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ' திருவாரூரில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை' என நூற்றுக்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்களை பார்த்து ரசித்தார்.
'காலம் உள்ள வரை கலைஞர்' 'வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியின் போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துறைமுருகன் அவர்கள், மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை மேயர் பிரியா அவர்கள் உடன் இருந்தனர்.
கண்காட்சியை பார்வையிட்ட இளைய திலகம் பிரபு அவர்கள் கண்காட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது இது தமிழ் மக்கள் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு கண்காட்சியாகும் என்றதுடன் கலைஞர் அவர்களின் திரை உலக வரலாற்றோடும் தமிழோடும் என் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார், என்பது எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது என்று தெரிவித்தார்.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...