Latest News :

ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! - கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21 ஆம் தேதி வெளியாகிறது
Thursday June-13 2024

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றிலும் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருக்கும் ‘குணா’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு மட்டும் இன்றி வசனம் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 33 வருடங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் வசனங்களும், பாடல்களும் தற்போதைய தலைமுறையினரும் கொண்டாடும் வகையில் அமைந்திருப்பது தான் இதன் கூடுதல் சிறப்பு. இதற்கு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’-ன் மிகப்பெரிய வெற்றியை சொல்லலாம்.

 

கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் குணா படத்தின் பாடல்கள், வசனங்கள் மற்றும் பீஜியம் ஆகியவை முக்கியமான இடத்தை பிடித்ததோடு, படத்தில் அவை இடம்பெறும் இடங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். கேரளாவையும் தாண்டி ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ரூ.200 கோடி வசூலை கடந்த முதல் மலையாளத் திரைப்படம் என்ற சாதனையை படைக்க ‘குணா’ திரைப்படமும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

இப்படி தலைமுறை கடந்தும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் ‘குணா’ திரைப்படம் டிஜிட்டல் வடிவில் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரிகத்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறது. ஆம், கமல்ஹாசனின் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில் வரும் ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக வெளியான ‘குணா’ திரைப்படத்தை சுவாதி சித்ரா இண்டர்நேஷ்னல் தயாரிக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் உலகம் முழுவதும் வெளியிட்டது. இளையராஜா இசையமைக்க, பாலகுமாரன் வசனம் எழுத, வேணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர்.

 

கமல்ஹாசனுடன் ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய் ரத்தினம், எஸ்.வரலட்சுமி, கிரீஷ் கர்னாட், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்திருக்கும் குணா திரைப்படத்திற்கு 1991 ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான மூன்றாவது பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முண்ணணி நிறுவனமாக, திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் குணா படத்தை உலகம் முழுவதும் வரும் ஜூன் 21 ஆம் தேதி மிக பிரமாண்டமான முறையில் வெளியிடுகிறது.

 

’குணா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் மீண்டும் வெளியாவது குறித்து படத்தின் இயக்குநர் சந்தான பாரதி கூறுகையில், ”குணா திரைப்படம் வெளியான போது கூட திரையரங்குகளில் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இன்றைய தலைமுறை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதை பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது. இப்போது படம் மீண்டும் வெளியாக இருப்பதும், மறு வெளியீட்டு பணிகள் மிகப்பெரிய அளவில் நடப்பதும் எனக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.” என்றார்.

Related News

9819

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery