விஜய் என்றாலே பிரச்சினை தான், என்ற ரீதியில் அவரது படங்களுக்கு தொடர் தொல்லைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தலைப்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்டிரைக் என்று அனைத்து பிரச்சினைகளும் தீந்த நிலையில், தற்போது விலங்கு நல வாரியத்தின் நோட்டீஸ் மற்றும் அனுமதி சான்றிதழ் குறித்து புது பிரச்சினை உருவாகியுள்ளது.
என்னதான் பிரச்சினை வந்தாலும், தீபாவளியன்று மெர்சல் கண்டிப்பாக வெளியாகும், என்று உறுதியாக ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கூறியதோடு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இயக்குநர் அட்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இதுவரை மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை, என்று தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
விலங்குகள் நல வாரியத்தின் நோட்டிஸுக்கு பதில் அளித்துள்ள தணிக்கை வாரியம், மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை, என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலைய்ல், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை வாரியத்திடம் ‘மெர்சல்’ பட தயாரிப்பு தரப்பு பேரம் நடத்தி வருவதாக, வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...