Latest News :

’டகோயிட்’ படப்பிடிப்பில் இணைந்த ஸ்ருதி ஹாசன்!
Thursday June-13 2024

பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘டகோயிட்’ திரைப்படத்தில் ஆத்வி சேஷி நாயகனாக நடிக்க, நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில், தற்போது முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

இந்த நிலையில், ஐதராபாத் படப்பிடிப்பில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசனும் இணைந்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷ் உடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, இனிமையான படப்பிடிப்பு அனுபவம், என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான்   ‘டகோயிட்’.  ஆத்வி சேஷின் 'க்ஷணம்' மற்றும் 'கூடாச்சாரி' உள்ளிட்ட பல தெலுங்கு பிளாக்பஸ்டர் படங்களுக்கு  ஒளிப்பதிவாளராக பணியாற்றிய, ஷனைல் தியோ இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆத்வி சேஷு மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை சுப்ரியா யர்லகட்டா தயாரிக்க, சுனில் நரங் இணை தயாரிப்பு செய்துள்ளார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இப்படத்தினை வழங்குகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

 

இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு பெரும் பாராட்டுக்களைக் குவித்த ’மேஜர்’ திரைப்படத்திற்கு பிறகு உருவாகும், ஆத்வி சேஷின் இரண்டாவது இந்திப் படம் இதுவாகும்.

Related News

9821

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery