’இந்தியன் 2’, ’வேட்டையன்’, ’விடாமுயற்சி’ என இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களைக் கொண்டு பல தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வகையில், புதுமையான திரைக்கதையில் லாக்டவுன் காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகும் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
‘லாக்டவுன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்லி, நிரவ்ஷா, லிவிங்ஸ்டன் உள்ளிட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி படத்தின் மீது எதிரபார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...