Latest News :

சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘சட்டம் என் கையில்’! - ஜூன் 21 ஆம் தேதி வெளியாகிறது
Sunday June-16 2024

ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி.ராஜஸ்வரராவ் தயாரிப்பில் ஏ.அபிராமு இயக்கத்தில் வெளியான தெலுங்குத் திரைப்படம்,  ‘சட்டம் என் கையில்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

 

இந்த படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராமன், சத்யபிரகாஷ், தீபாவளி தீபு, நாகமகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கக்கூடிய சக்திப்படைத்த ஒரு ஜமீந்தார் குடும்பத்திற்கும், நீதிக்க்காக போராடும் ஒரு ஏழ்மை நிலையிலுள்ள பெண்ணிற்கும் நடக்கும் யுத்தத்தை, தனி ஒரு பெண்ணாக நின்று சட்டத்தின் முன் போராடி, தன் கையினால் தீர்ப்பு கொடுத்த வீர தீர பெண்ணின் கதை தான் ‘சட்டன் என் கையில்’ என்கிறார் தயாரிப்பாளர் டி.ராஜேஸ்வரராவ்.

 

என்.சுதாகர் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கோட்டி இசையமைக்க, பத்மா பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.

 

கமலஹாசன் நடித்து 1978 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ’சட்டம் என் கையில்’ படத்தின் தலைப்பையே இப்படத்திற்கு வைத்திருப்பது  படத்திற்கு கூடுதல் பலம்.

 

இப்படத்தின் செண்டிமெண்ட் காட்சிகள் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் விதத்தில் இருப்பதோடு, பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் தனி முத்திரை பதிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

இப்படம் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

9828

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
Sunday November-09 2025

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற  சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...

Recent Gallery