‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Tuesday June-18 2024

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் பொதினேனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக உருவாகும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏனெனில், ஆகஸ்ட் 15  வியாழன் அன்று விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ரக்க்ஷா பந்தன்) மற்றொரு விடுமுறையும் வருவதால் மக்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுத்து, படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்யும் என்கின்றனர் படக்குழுவினர்.  

 

’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ப்ரீக்குவலை விட ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் டபுளாக பார்வையாளர்களுக்கு இதில் இருக்கும். இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் தனது ஹீரோவை சிறந்த ஸ்டைலான, மாஸ் மற்றும் அதிரடியான அவதாரத்தில் திரையில் காட்ட இருக்கிறார். ஹீரோ ராமும் இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் சிறப்பாக கொடுத்துள்ளார். நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்க, ராமுக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

மணி ஷர்மா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். இந்தப் படத்தை பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்.

Related News

9829

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery