காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நிதயாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி, குற்றம் சாட்டி வந்த நிலையில், நிதயா அவரது ஆண் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு தன்னை மிரட்டுவதாக தாடி பாலாஜி புகார் அளித்தார்.
இதையடுத்து நித்யா தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், தாடி பாலாஜி மன நலம் பாதிக்கப்பட்டவரை போல நடந்துக்கொள்வதோடு, மனைவியையும், குழந்தையையும் தீயிட்டு எரிக்க முயல்வது போலவும் இருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ பதிவுக்கு பிறகு, நித்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தனது ஆண் நண்பருக்கு செல்போன் பரிசு வழங்கியிருப்பதும், அவரிடம் தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வரும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இதை மறுத்துள்ள நித்யா, பாலாஜி ஒரு நடிகர் என்பதால், போலீஸ், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அவருக்கு பலர் ஆதரவாக செயல்படுகிறார்கள். அதனால் தன் மீது வீன் பழியை சுமத்துகிறார்கள். இது தன்னை மட்டும் இன்றி தனது குழந்தையின் வாழ்க்கையையும் பாதிக்கும், என்று கூறியுள்ளார்.
மேலும், வில்லிவாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், நான் வீடியோ வெளியிடக்கூடாது, பத்திரிகையாளர்களை சந்திக்கக் கூடாது என என்னை மிரட்டுகிறார். நான் மனவலிமை உள்ளவளாக இருந்தாலும், இதுபோன்ற நிலை தொடர்ந்தால் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழி தெரியவில்லை, என்று தெரிவித்துள்ள அவர், தனக்கு தனது பெற்றோர் கொடுத்த வீட்டை அபகரிக்கவே தன்னுடன் பாலாஜி வாழ விருபுவதாகவும், கூறியுள்ளார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...