Latest News :

’வேற மாறி ஆபிஸ்’ இணையத் தொடரின் இரண்டாம் சீசன் தொடங்கியது!
Tuesday June-18 2024

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் இணையத் தொடரான ‘வேற மாறி ஆபிஸ்’-ன் இரண்டாவது பாகம் தொடங்கியுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த இணையத் தொடராக உருவெடுத்த, ‘வேற மாறி ஆபீஸ்’ தொடரின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக, அத்தொடரின் இரண்டாம் சீசனை  பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது ஆஹா நிறுவனம்.  

 

முற்றிலும் புதிய வடிவத்தில், புதிய களத்தில், கூடுதல் சுவாரஸ்ய அம்சங்களுடன் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’ உருவாகவுள்ளது. கடந்த சீசனின் தொடர்ச்சியாக, நிஷா (ஜனனி) தலைமையில் இவர்கள் அனைவரும் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்குகிறார்கள். அந்நிறுவனம் சந்திக்கும் சவால்கள், பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகள் போன்றவற்றை எப்படி ஒருசேர சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்வதே இந்த தொடரின் கதை.

 

கனா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகாந்த் தயாரிக்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’ தொடரை ஜஷ்வினி இயக்குகிறார். இதில், முதல் சீசனில் முதன்மை வேடத்தில் நடித்த ஆர்ஜே விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டான் ஆகியோருடன் லொள்ளு சபா மாறன், ஜனனி அசோக்குமார், ஜெயசீலன், ரவீணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஷ்யாமா, சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம், பப்பு, ஸ்வப்னா, தாப்பா, விஷ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

கடந்த ஜூன் 12 ஆம் தேதி பூஜையுடன் இத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில்,  படக்குழுவினர், தொடரில் நடிக்கும் நட்சத்திரங்களுடன், ஆஹா தமிழ் தளத்தின் குழுவினரும் கலந்துக் கொண்டார்கள்.

 

‘வேற மாறி ஆபீஸ்’ -வெப் சீரிஸ் சீசன் 2 வுக்கு, சத்யா ஒளிப்பதிவு செய்ய,  ராகவ் இசையமைக்கிறார். கலை இயக்குநராக நர்மதா பணியாற்ற, படத்தொகுப்பாளராக விக்கி பணியாற்றுகிறார்.

 

முதல் சீசனை விட இரண்டு மடங்கு ஆச்சரியங்களுடன், அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்களுடன், மிக உயர்ந்த தரத்தில் இத்தொடரை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வரும்  ஆஹா தமிழ், படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. 

Related News

9830

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery