Latest News :

’புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Tuesday June-18 2024

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்த படக்குழு அதற்போது புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி ‘புஷ்பா 2 - தி ரூல்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

மேலும், வெளியீட்டு தள்ளிப் போனதற்கான காரணத்தை கூறியுள்ள படக்குழு, படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இணையற்ற சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுத்துள்ளது படக்குழு. இதை அடைய, படத்தைத் தரத்துடன் முடிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும், என்று தெரிவித்துள்ளது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'புஷ்பா2' தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. படத்தின் புரோமோஷனாக வெளியான பாடல்கள் மற்றும் டீசர் என ஒவ்வொன்றும் இயற்கையாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சமீபத்தில் மாஸ் ஜாதரா டீசர், எனர்ஜிடிக்கான 'புஷ்பா புஷ்பா' டைட்டில் பாடல் மற்றும் 'அங்காரன்' காதல் பாடல் என இவை யூடியூப் பிளாட்ஃபார்மில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. நீண்ட காலத்திற்கு முதல் 10 இடங்களில் யூடியூபில் பிரபலமாக இருந்தன. மேலும், இந்தப் பாடல்கள் ரீல்ஸ் கண்டெண்ட்டாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள 'புஷ்பா 2: தி ரூல்' படத்தை மேஸ்ட்ரோ சுகுமார் இயக்கியுள்ளார். படத்தில் ஐகான் ஸ்டார்அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related News

9835

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery