Latest News :

பிரபு தேவாவின் புதிய படத்தின் தலைப்பு ‘மூன் வாக்’!
Wednesday June-19 2024

பிரபல டிஜிட்டல் ஊகமான பிகைண்ட்உட்ஸ் (Behindwoods) தயாரிக்கும் திரைப்படத்தை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ்.என்.எஸ் இயக்குகிறார். இதில், பிரபு தேவா நாயகனாக நடிக்க, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘மூன் வாக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

 

25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா இணைகிறார்கள் என்ற நிலையில்,  இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலும் 'மூன் வாக்' தலைப்பு அமைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைவரையும் மயக்கும் வகையில் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஆல்பம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.  

 

அனைத்து பொழுது போக்கு அம்சங்களுடன்,  நகைச்சுவை கலந்த அட்டகாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் ‘மூன் வாக்’ படத்தை பிகைண்ட்உட்ஸ் (Behindwoods) நிறுவனம் சார்பில்  மனோஜ்.என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் தயாரித்து வருகின்றனர். அனூப் வி.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷானு முரளிதரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்ற, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்கிறார்.

 

படம் பற்றி அடுத்தடுத்த அறிவிப்புகளை விரைவில் வெளியிட இருக்கும் படக்குழு, 2025 ஆம் ஆண்டு பான் இந்தியா திரைப்படமாக ‘மூன் வாக்’-கை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Related News

9838

வைரலான ‘வா வாத்தியார்’ படத்தின் ரீமிக்ஸ் பாடல்!
Tuesday December-02 2025

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ‘ரேகை’ தொடர்!
Tuesday December-02 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...

டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் ‘மகாசேனா’!
Tuesday December-02 2025

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...

Recent Gallery